சுடச்சுட

    

    தமிழக சிறைகளில் 9 மரண தண்டனைக் கைதிகள் : மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 16th March 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஒன்பது பேர் அடைக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
    இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார்.
    இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காரம் அஹிர் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம்:
    தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத் துறை (என்சிஆர்பி) தகவலின்படி, 2015-ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 கைதிகள், தில்லி சிறைகளில் 9 கைதிகள், கேரள மாநிலத்தில் 16 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என கூறியுள்ளார்.
    தில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் முழு உடல் பாதுகாப்பு சோதனை நடத்துவது தொடர்பாக திருச்சி சிவா எழுப்பிய மற்றொரு கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜயந்த் சின்ஹா அளித்த பதில் விவரம் வருமாறு:
    தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) முழு உடலை பரிசோதனை செய்யும் நடவடிக்கை 10,054 பயணிகளிடம் சோதனை முறையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பயணிகளிடம் சோதனையிடுவதற்காக ’உடல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் தேவை' என்ற அளவுகோலை நிர்ணயிக்கும் புள்ளி விவரங்களைச் சேகரிக்க இச்சோதனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai