சுடச்சுட

  

  கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த தேசிய சுகாதாரக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
  இதையடுத்து, அந்தக் கொள்கையை மத்திய அரசு முறைப்படி விரைவில் அமல்படுத்தும் எனத் தெரிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் தொடங்கி நாட்டின் அனைத்து இடங்களிலும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
  உதாரணமாக, தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய்த் தடுப்பு, மகப்பேறு மருத்துவம் உள்பட குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கொள்கையின்கீழ், தொற்றா நோய்கள் சிகிச்சை (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை) உள்பட பல்வேறு மருத்துவ சேவைகளை அளிக்க வகை செய்யப்படும் எனத் தெரிகிறது.
  அதேபோன்று மாவட்ட மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துவது தொடர்பான விஷயங்களும் புதிய கொள்கையில் பிரதான இடம்பிடித்துள்ளன.
  பல்வேறு காரணங்களால் தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருமனதாக சுகாதாரக் கொள்கைக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது.
  இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai