சுடச்சுட

  
  manokar

  கோவா சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார். 

  நடைபெற்று முடிந்த கோவா பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

  பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள் மற்றும் மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு பாஜக ஆட்சியமைத்தது. 

  இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் பாஜக சட்டப்பேரவையில் தனது பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

  அதன்படி, கோவா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 22 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 16 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு எம்எல்ஏ வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai