சுடச்சுட

    

    ’நாள்தோறும் ரூ.4 கோடி அளவுக்கு மின்னணுப் பரிமாற்றம் அதிகரிக்கும்'

    By DIN  |   Published on : 16th March 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னணு முறையில் நடைபெறும் பணப்பரிமாற்றம் நாள்தோறும் ரூ.4 கோடி அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமை தின நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2015-ஆம் ஆண்டில் மின்னணுப் பணப்பரிமாற்றம் என்பது நாள்தோறும் ரூ.1.85 கோடி என்ற அளவில் இருந்தது. 2016-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.3 கோடியாக அதிகரித்தது. 2017-ஆம் ஆண்டில் இது ரூ.4 கோடியாக அதிகரிக்கும்.
    மின்னணுப் பரிமாற்றத்தை அதிகரிக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் அதனை எளிதாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மின்னணுப் பரிமாற்றத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எனினும், இப்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மின்னணுப் பரிமாற்றங்களில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்றார் அவர்.
    உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு பெருமளவில் ஊக்குவித்து வருகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai