சுடச்சுட

  

  நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 16th March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் பிரதமர் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  உலக நுகர்வோர் தினமாகிய இன்று, நுகர்வோருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன். அவர்களின் நுகர்வுதான், பிறரது பொருளாதாரம் உயர்வதற்கு முக்கியக்காரணமாகும்.
  நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதையும் உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
  நாட்டில் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இயக்கத்தில் நுகர்வோர் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக கணினி வழி பரிவர்த்தனைகளுக்கு நுகர்வோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  புதிய மசோதா கொண்டு வருகிறது மத்திய அரசு: இதனிடையே, 30 ஆண்டுகால பழைமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை காலாவதி செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொண்டு வந்தது. இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவும் தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அளித்திருந்தது.
  இந்த பரிந்துரைகளில் சிலவற்றை ஏற்றுக் கொண்டது. அதேபோல், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவும் சில திருத்தங்களை செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த மசோதா மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், ’80 திருத்தங்களை செய்வதற்கு எங்களது அமைச்சகம் பரிந்துரைத்தது. இதையடுத்து புதிய மசோதாவை கொண்டு வரும்படி சட்ட அமைச்சகம் ஆலோசனை அளித்தது. அந்த மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai