சுடச்சுட

    

    ’நோக்கியா' தொழிற்சாலை ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

    By DIN  |   Published on : 16th March 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ’நோக்கியா' தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக புதன்கிழமை கோரிக்கை விடுத்தது.
    இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் முன்வைத்த கோரிக்கை:
    எனது மக்களவைத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியா தொழிற்சாலையின் செயல்பாடுகள் கடந்த 2014, நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து முடக்கிவைக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்துக்கு நிலம், இதர உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்கியிருந்தது.
    ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அந்நிறுவனத்தைச் சார்ந்திருந்தனர்.
    தற்போது நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    எனவே, ’இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைச் செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, நோக்கியா தொழிற்சாலை மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கே.என்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
    ’நீட்' மசோதாவுக்கு ஒப்புதல் தேவை: தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் வலியுறுத்தினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai