சுடச்சுட

    

    பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் அமரீந்தர் சிங்

    By  சண்டிகர்,  |   Published on : 16th March 2017 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cm

    பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார். 

    பஞ்சாப் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77-இல் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (15)-பாஜக (3) கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து அமரீந்தர் சிங்கை, ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வி.வி.சிங் பட்னூர் அழைப்புவிடுத்தார். 

    இந்நிலையில் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னூர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதல்வருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் விரர் நவ்ஜோத்சிங் சித்து உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். 

    பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் முதல்வராக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவர் பதவி வகித்துள்ளார். அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai