சுடச்சுட

    

    புதிய சமாஜவாதி எம்எல்ஏக்களுக்கு தலைமை வகிக்கப் போவது யார்?: இன்று முடிவு

    By DIN  |   Published on : 16th March 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏக்களுக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து அக்கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 16) முக்கிய முடிவெடுக்கவுள்ளனர்.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், அக்கட்சியின் தேசியத் தலைவரான அகிலேஷ் யாதவ், மேலவை உறுப்பினராக இருப்பதால், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவரால் சட்டமேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் செயல்பட முடியும்.
    இந்நிலையில், புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தலைமை வகிப்பது தொடர்பாக சமாஜவாதி தலைவர்கள் வியாழக்கிழமை கூடி முக்கிய முடிவெடுக்கவுள்ளனர். இந்த கூட்டத்தில், சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தனது தம்பியான சிவ்பால் சிங் யாதவின் பெயரை முன்மொழியலாம் எனத் தெரிகிறது. ஆனால், சிவ்பால் சிங் யாதவுக்கும், கட்சியின் தேசியத் தலைவரான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அவரை தேர்ந்தெடுக்க அகிலேஷ் விரும்ப மாட்டார் என கூறப்படுகிறது.
    இதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு மூத்த தலைவர் ஆஸம்கானின் பெயரும் இந்தப் பதவிக்கு அடிபடுகிறது. இந்நிலையில், சிவ்பால் சிங் யாதவ் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ’மீண்டும் போராடுவோம். அப்போது எங்களுக்கு வெற்றி கிடைக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai