சுடச்சுட

  

  புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டை அச்சிட ரூ.3.77 வரை செலவாகிறது: மத்திய அரசு

  By DIN  |   Published on : 16th March 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  500

  புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டை அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.77 வரையிலும் செலவாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் தற்போதுதான் அச்சிடப்பட்டு வருகின்றன. ஆதலால், அதனை அச்சிடுவதற்கு ஆகும் மொத்தச் செலவை தற்போது கணக்கிட இயலாது. எனினும், ரூ.500ஐ அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.09 வரையிலும், ரூ.2,000ஐ அச்சிடுவதற்கு ரூ.3.54 முதல் ரூ.3.77 வரையிலும் உத்தேசமாக செலவாவதாக கணிக்கப்பட்டுள்ளது.
  உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவு அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை சரிபார்த்தல், கணக்கிடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்தப் பதிலில் மேக்வால் தெரிவித்துள்ளார்.
  இதேபோல், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட வாங்கும் தாள்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் தனியாக பதிலை அவர் தாக்கல் செய்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான தாளை ஏற்கெனவே யாரிடம் இருந்து ரிசர்வ் வங்கி கொள்முதல் செய்து வந்ததோ, அங்கிருந்துதான் தற்போதும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவுக்கு அத்தகைய தாள்களை விநியோகம் செய்யும் அமைப்புகளிடம் வேறு யாருக்கும் அத்தகைய தாளை விற்பனை செய்யக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதை அந்த அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
  நாடு முழுவதும் 2.18 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் தேதி நிலவரப்படி, அந்த ஏடிஎம் இயந்திரங்களில் 1.98 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றப்பட்டு புதிய அம்சங்களுடன் கூடிய வேறு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய ஏடிஎம் இயந்திரங்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த பதிலில் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai