சுடச்சுட

    

    பொது கணக்குக் குழுவின் அடுத்த தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே

    By DIN  |   Published on : 16th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mallikar

    பொது கணக்குக் குழுவின் (பிஏசி) அடுத்த தலைவராக மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் பொது கணக்குக் குழு, மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவுகளை தணிக்கை செய்யும் பணியை மேற்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்குழு மாற்றியமைக்கப்படும்.
    நாடாளுமன்ற எம்.பி.க்கள் 22 பேரை (மக்களவை-15, மாநிலங்களவை-7) உள்ளடக்கிய இந்த குழுவின் தலைவர் பொறுப்பு, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கு வழங்கப்படுகிறது. தற்போது பொது கணக்குக் குழுவின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி. கே.வி.தாமஸின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இவர் ஏற்கெனவே இரண்டு முறை இக்குழுவின் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
    இந்நிலையில், பொது கணக்குக் குழுவின் அடுத்த தலைவர் பதவிக்கு மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை பரிந்துரைத்து, மக்களவைத் தலைவருக்கு காங்கிரஸ் மேலிடம் கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    பொது கணக்குக் குழுவின் தலைவராக பொறுப்பேற்கும்போது, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து கிடைக்கும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அவருக்கென தனி அலுவலகமும் ஒதுக்கித் தரப்படும்.
    ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து பொது கணக்குக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேவைபட்டால், பிரதமரையே அழைத்து விசாரிப்போம் என்று கே.வி.தாமஸ் கூறியிருந்தார். இதற்கு, அக்குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai