சுடச்சுட

  

  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த
  ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படவிருக்கிறது.
  தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் என்ற அளவில் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
  இந்த நடவடிக்கையால், சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் அரசு கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.5,857 கோடி கூடுதல் செலவாகும் என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, அன்றாட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai