சுடச்சுட

    

    ரயில்வே பட்ஜெட் இணைப்புக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 16th March 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை மத்திய அரசு இணைத்ததற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தாரிக் அன்வர், சமாஜவாதி கட்சியின் தர்மேந்திர யாதவ் ஆகியோர் இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்கள் கூறியதாவது: பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதால் ரயில்வே துறையின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிட்டது. ரயில்வேயின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. பல ஆண்டு பாரம்பரியத்தை மத்திய அரசு முடக்கிவிட்டது. நாட்டில் தினமும் 3 கோடி பேர் ரயில்களில் பயணிக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய துறையின் முக்கியத்துவத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது என்றனர்.
    அப்போது குறிக்கிட்டுப் பேசிய பாஜக எம்.பி. ரவிந்திர குமார் ராய், ’ரயில்வே பட்ஜெட் என்பது பல ஆண்டுகளாக அத்துறை அமைச்சர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகவே இருந்தது. இதை அனைத்து ரயில்வே அமைச்சர்களும் விரும்பிவந்தனர். தாங்கள் சார்ந்துள்ள மாநிலங்களுக்கு சலுகை அளிப்பதையும் முன்பிருந்த ரயில்வே அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைத்தது சரியான நடவடிக்கை' என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai