சுடச்சுட

    

    2018-ஆம் ஆண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 3 முதல் பெறப்படுகின்றன

    By DIN  |   Published on : 16th March 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2018-ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன.
    அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாட்டவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு அமர்த்துவதற்கு இந்த விசா வழிவகை செய்கிறது. வழக்கமாக இந்த விண்ணப்பங்கள் பெறப்படும் தேதியை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை வெளியிடும். ஆனால், இந்த ஆண்டு அந்த விண்ணப்பங்கள் எத்தனை நாள்கள் பெறப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை இதுவரையிலும் வெளியிடவில்லை. பொதுவாக, வாரத்தில் முதல் 5 பணி நாள்களில் விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை பெறும்.
    பொது பிரிவில் 65 ஆயிரம் பேருக்கும், உயர்கல்வி பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 20 ஆயிரம் பேருக்கும் ஹெச்1பி விசா வழங்கலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த விசாக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு விண்ணப்பித்து வருகின்றனர். 2018-ஆம் நிதியாண்டு என்பது வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai