Enable Javscript for better performance
இந்தியாவில் 890 செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் 890 செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு

    By DIN  |   Published on : 17th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் 890-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
    மாநிலங்களவையில் மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது:
    மத்திய அரசு இதுவரை 890-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அனுமதி கொடுப்பதில் கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இப்போது, புதிதாக 112 சேனல்கள் தொடங்குவதற்கான மனுக்களை மத்திய அரசின் பரிசீலித்து வருகிறது.
    அகில இந்திய வானொலியின் பண்பலை (எப்.எம்.) விளம்பரங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.186 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai