சுடச்சுட

  
  TS_rawat

   

  டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில முதல்வராக  திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார்.

  உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 57 தொகுதிகளில் வெற்றியடைந்து. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஞாயிறு அன்று பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது.

  அதற்க்கு முன்னதாக இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திரிவேந்திர சிங் ராவத் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜே பி நட்டா, கட்சித் தலைவர்கள் ஷியாம் ஜாஜு, சரோஜ் பாண்டே மற்றும் கண்காணிப்பாளர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள்தான் திரிவேந்திர சிங் ராவத்தை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அறிவித்தனர்.

  திரிவேந்திர சிங் ராவத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். இவருக்கு வயது 56. இவர் பாஜக கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.  

  திரிவேந்திர சிங் ராவத் ஞாயிறு மாலை உத்தரகாண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் முக்கிய மத்திய அமைச்சசர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai