Enable Javscript for better performance
உ.பி., உத்தரகண்ட் முதல்வர் யார்? நாளை முடிவு செய்கிறது பாஜக- Dinamani

சுடச்சுட

    

    உ.பி., உத்தரகண்ட் முதல்வர் யார்? நாளை முடிவு செய்கிறது பாஜக

    By DIN  |   Published on : 17th March 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்? என்பதை பாஜக எம்எல்ஏக்கள் குழுக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 18) முடிவு செய்யவுள்ளது.
    உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
    எனினும், முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலில் போட்டியிட்ட பாஜக, இப்போது மாநிலத்தில் முதல்வராக யாரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
    மணிப்பூர், கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால் ஆளுநரின் உத்தரவுப்படி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. அதற்கேற்ப, கோவாவில் மனோகர் பாரிக்கர் அரசு வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தது.
    அடுத்ததாக, மணிப்பூரில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, உத்தரப் பிரதேசத்தின் அடுத்த முதல்வரை அக்கட்சித் தலைமை தேர்வு செய்யும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.
    இந்தச் சூழலில் வரும் சனிக்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னௌவில் கூடி புதிய சட்டப் பேரவைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளதாக அக்கட்சி வியாழக்கிழமை அறிவித்தது.
    இதுகுறித்து உத்தரப் பிரதேச பாஜக பொதுச் செயலர் விஜய் பகதூர் பாடக், செய்தியாளர்களிடம் கூறுகையில், ’லக்னௌவில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கூட உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் மத்திய பார்வையாளர்களான மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கட்சியின் தேசிய பொதுச் செயலர் பூபேந்திர யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்' என்றார்.
    அவரிடம் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’அதுதொடர்பாக என்னால் எதுவம் கூற முடியாது' என்றார் விஜய் பகதூர். உத்தரப் பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போதைய முதல்வர் தேர்வில் பாஜக மிகுந்த கவனத்தை கடைப்பிடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
    உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மத்திய அமைச்சர்களாக உள்ள ராஜ்நாத் சிங், மனோஜ் சின்ஹா, மகேஷ் சர்மா அல்லது மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    உத்தரகண்டின் முதல்வரும் தேர்வு: இதனிடையே, உத்தரப் பிரதேசம் போலவே உத்தரகண்டின் அடுத்த முதல்வர் யார்? என்பதை தேர்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை கூட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai