சுடச்சுட

  

  உ.பி. குளிர்பதனக் கிடங்கு வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு

  By DIN  |   Published on : 17th March 2017 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே குளிர்பதனக் கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  கான்பூர் அருகேயுள்ள ஷிவ்ராஜ்பூரில் செயல்பட்டு வந்த அந்தக் குளிர்பதன சேமிப்புக் கிடங்கில், எரிவாயுக் கசிவு காரணமாக புதன்கிழமை மதியம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில், அந்தக் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி, 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தக் குளிர்பதனக் கிடங்கு உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அந்தக் கிடங்கின் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  இதுகுறித்து கான்பூர் நகர காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகாஷ் குல்ஹரி கூறியதாவது: எரிவாயுக் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்த குளிர்பதன கிடங்கு உரிய உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்த குளிர்பதனக் கிடங்கில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி உருளைக் கிழங்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக அந்த கிடங்கின் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் ஆகாஷ் குல்ஹரி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai