சுடச்சுட

    

    என்ன வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடா? அதிரும் தேர்தல் ஆணையம்

    By DIN  |   Published on : 17th March 2017 03:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    electionvoting


    புது தில்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக பல அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    இந்த புகார்கள் தொடர்பாக தனது கடுமையான குரலை பதிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், அடிப்படை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இவை. அரசியல் கட்சிகள் கூறும் எந்த புகாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வகையிலும் முறைகேடு செய்ய முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முறைகேடு செய்யவே இயலாத இயந்திரம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதியிட்டுக் கூறுகிறது.

    அதே போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது என்பதை அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு குடிமகனும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai