சுடச்சுட

    

    செய்தியாளர் சந்திப்புக்கு முயற்சி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது

    By DIN  |   Published on : 17th March 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த முயன்ற ஜம்மு - காஷ்மீர் பிரிவினைத் தலைவர்கள் கிலானி, மிர்வாஸ் உமர் உள்ளிட்டோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் கிலானி மற்றும் பிரிவினைவாதத் தலைவர்கள் மிர்வாஸ் உமர், யாசின் மாலிக் ஆகியோர், செய்தியாளர்கள் சந்திப்புக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
    ஹைதர்போரா பகுதியில் அமைந்துள்ள கிலானியின் வீட்டில் இந்நிகழ்வை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக மக்களிடம் அவர்கள் வலியுறுத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
    இதையடுத்து, கிலானியின் வீட்டுக்குச் சென்று செய்தியாளர்களைச் சந்திக்க முயன்ற மிர்வாஸ் உமர் மற்றும் யாசின் மாலிக் ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், கிலானிக்கும் செய்தியாளர்களிடம் பேச அனுமதி மறுத்தனர்.
    இதைத்தொடர்ந்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது இடைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
    இதனிடையே, கிலானியின் வீட்டின் முன்பு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் புகைப்படக் கலைஞர்கள் இருவர் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai