Enable Javscript for better performance
ஜாகீர் நாயக் அமைப்புக்கான தடையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஜாகீர் நாயக் அமைப்புக்கான தடையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

    By DIN  |   Published on : 17th March 2017 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    தேச நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து பரவலாகக் கண்டனத்துக்கு உள்ளானது.
    இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான பீஸ் டிவிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அவருக்குத் தடை விதித்துள்ளன.
    இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக இளைஞர்களுக்கு தீவிரவாத எண்ணங்கள் ஊட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
    இதை எதிர்த்து ஜாகீர் நாயக் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி சஞ்ஜீவ் சச்தேவா வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
    ஜாகீர் நாயக்கின் அமைப்பைத் தடை செய்ததற்கு வலுவான காரணங்கள் இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்படும் கூற்றை ஏற்றுக் கொள்ள இயலாது. தேசத்தின் இறையாண்மை, நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
    அதன்படி பார்க்கும்போது இந்த முடிவு சட்டவிரோதமானது என்றோ அல்லது தன்னிச்சையானது என்றோ கருத முடியாது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai