சுடச்சுட

  
  Rahul

  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை சந்திக்க ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளிநாடு சென்றார்.
  பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் சண்டீகரில் வியாழக்கிழமை பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தில்லி திரும்பியவுடன் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
  அவர் எந்த நாட்டுக்கு சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் இல்லை.
  இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ’தனது தாய் சோனியா காந்தியை பார்ப்பதற்காக ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் தனது தாயுடன் நாடு திரும்புவார்' என்றார்.
  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்பட 5 மாநிலங்களுக்கு அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்காக சோனியா காந்தி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதும் அவர் இங்கு இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
  இதனிடையே, சோனியா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai