சுடச்சுட

  

  ஒடிஸா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்பித்தல் போட்டியில் 5 வயது முஸ்லிம் சிறுமி முதலிடத்தைப் பிடித்தார்.
  கேந்திரபாரா நகரிலுள்ள சோவானியா உறைவிடப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருபவர் ஃபிர்தௌஸ் (5). இவர், மாவட்ட அளவில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்பித்தல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஊர்மிளா கர் தெரிவித்ததாவது: இப்பள்ளியில் ஃபிர்தௌஸ் சேர்ந்த நாள் முதல், கல்வியில் அவர் சிறந்து விளங்குகிறார். அவருக்கு அபார நினைவாற்றல் உண்டு. இங்கு ஹிந்து, முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் ஒற்றுமையுடன் படித்து வருகின்றனர். பாடப் புத்தகங்களை மட்டுமல்லாது, அனைத்து மதங்களிலும் உள்ள நீதிநெறி கருத்துகளை நாங்கள் போதித்து வருகிறோம் என்றார் அவர்.
  தமது வெற்றி குறித்து, மாணவி ஃபிர்தௌஸ் கூறியதாவது: நீதிநெறி வகுப்புகளின்போது ’’வாழு, வாழ விடு'' என்ற தத்துவத்தை எனது ஆசிரியர்கள் போதித்துள்ளனர். மேலும், இந்த ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பத்தைப் போன்றது. நாம் அனைவரும், அதன் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் போதித்துள்ளனர். அதையே, நான் கடைப்பிடிக்கிறேன் என்றார் ஃபிர்தௌஸ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai