Enable Javscript for better performance
பலியான 12 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.9 லட்சம்: நடிகர் அக்ஷய்குமார் நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    பலியான 12 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.9 லட்சம்: நடிகர் அக்ஷய்குமார் நிதியுதவி

    By DIN  |   Published on : 17th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Akshykumar

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நக்ஸலைட்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்ஃ) வீரர்கள் 12 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.9 லட்சம் நிதியுதவியை பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் அளித்துள்ளார்.
    இது தொடர்பாக தில்லியில் அரசு அதிகாரிகள் கூறியதாவது:
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நஸ்ஸலைட் தீவிரவாதிகளால் கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தை நடிகர் அக்ஷய்குமார் தொடர்புகொண்டார். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தாருக்கு உதவ தாம் விரும்புவதால், அவர்களின் வங்கிக் கணக்கு எண்களை அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
    இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கண்ட வீரர்களின் குடும்பத்தாரின் வங்கிக் கணக்கு எண்களை அவருக்கு அளிக்குமாறு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவிட்டது.
    அதன்படி அந்த எண்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பங்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் அக்ஷய்
    குமார் தலா ரூ.9 லட்சத்தை புதன்கிழமை செலுத்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சிஆர்பிஎஃப் படைத் தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "அக்ஷய்குமாரின் இந்த நடவடிக்கையானது அவரது தேசபக்தியையும், எங்கள் படைப்பிரிவு மற்றும் தேசத்தின் மீதான அன்பையும் வெளிக்காட்டுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai