Enable Javscript for better performance
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: மாயாவதியின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: மாயாவதியின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

    By DIN  |   Published on : 17th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக மாயாவதி தெரிவித்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
    முன்னதாக, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். பஞ்சாப் தேர்தலில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கும் இதே காரணத்தை அரவிந்த் கேஜரிவால் சுட்டிக்காட்டியிருந்தார்.
    இந்நிலையில், மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருப்பதை ஏற்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. எந்தவித ஆதாரமும் இன்றி பொதுவாக இப்படி ஒரு குற்றச்சாட்டை பகுஜன் சமாஜ் கட்சி கூறுவதை ஏற்க முடியாது. அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai