சுடச்சுட

  

  மின் உற்பத்தி விவகாரம்: மக்களவையில் பாஜக - காங்கிரஸ் இடையே மோதல்

  By DIN  |   Published on : 17th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவையில், மின் உற்பத்தி தொடர்பாக ஆளும் பாஜக-வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
  மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
  கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டில் மின் உற்பத்தி மோசமான நிலைமையில் இருந்தது.
  பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே முடங்கிக் கிடந்தன. சுமார் 7 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் இருந்தது என்றார்.
  அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று அமைச்சரின் கருத்துகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தொடர்ந்து, மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில் ’மத்தியில் 2014-ஆம் ஆண்டு மே மாதம், மோடி அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை எவ்வளவு மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது'? என்று கேள்வியெழுப்பினார்.
  அப்போது, பாஜக உறுப்பினர்கள் சிலர் குறுக்கிட்டு மின் உற்பத்தி விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற தோல்விகள் அடங்கிய பட்டியலைத் தாங்கள் தயார் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai