Enable Javscript for better performance
ராஜஸ்தான்: குடிபோதையில் காவல் நிலையத்தில் தகராறு செய்த காவலர் பணி இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜஸ்தான்: குடிபோதையில் காவல் நிலையத்தில் தகராறு செய்த காவலர் பணி இடைநீக்கம்

    By சிரோஹி  |   Published on : 17th March 2017 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    police

    ராஜஸ்தானில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்று குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். அவர் பணி நேரத்தில் குடித்ததோடு மட்டுமல்லாமல் காவல் நிலையத்திற்குள் வந்து சக காவலர்களிடம் தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில் அவர் குடித்துவிட்டு பணிக்கு வந்தது உறுதியானது.

    மேலும் இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவலர் ஒருவரே குடிபோதையில் காவல் நிலையத்தில் தகராறு செய்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai