சுடச்சுட

    

    வெளிநாடுகளில் சிக்கியிருந்த 95ஆயிரம் பேர் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 17th March 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு வெளிநாடுகளில் போர், உள்நாட்டு சண்டை, இயற்கைப் பேரிடர் ஆகிய காரணங்களால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்கள் 95ஆயிரம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்தது.
    இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
    வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களால் சிக்கித் தவித்து வந்த இந்தியர்கள் 95,665 பேர் கடந்த 2 ஆண்டுகளில் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர்.
    வெளிநாடுகளில் பணியில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முதல் உரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஏதேனும் பிரச்னைகளில் சிக்கினால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றார் சிங்.
    ’மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் 12,700 பேர்': கையால் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பினும் 13 மாநிலங்களில் 12,700-க்கும் மேற்பட்டோர் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
    இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட் கூறுகையில், ’13 மாநிலங்களில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலில் மொத்தம் 12,737 பேர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கி மறுவாழ்வு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.
    கையால் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai