Enable Javscript for better performance
ஆக்ராவில் ரயில் நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு; யாருக்கும் காயமில்லை- Dinamani

சுடச்சுட

    

    ஆக்ராவில் ரயில் நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு; யாருக்கும் காயமில்லை

    By DIN  |   Published on : 18th March 2017 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bomb


    ஆக்ரா: ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்துக்கு அருகே இன்று காலை குறைந்த சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச்சிதறின.

    இந்த இரண்டு குண்டு வெடிப்புகளிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தை விரைவு ரயில் ஒன்று கடந்து சென்ற சில மணி நேரத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. வெடிகுண்டு நிகழ்ந்த இடத்தில் இருந்து பயங்கரவாத தாக்குதல் குறித்து மிரட்டல் கடிதம் ஒன்றை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

    ரயில் நிலையத்துக்கு அருகே குப்பைகளை நிரப்பி வைத்திருந்த டிராலியில் ஒரு குண்டும், ரயில் நிலையத்துக்கு அருகே மற்றொரு குண்டும் வெடித்துள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai