சுடச்சுட

    

    ’உ.பி. தேர்தலுக்காக ரூ.5,500 கோடி செலவிட்ட அரசியல் கட்சிகள்'

    By DIN  |   Published on : 18th March 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்மையில் நடந்துமுடிந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது பெரிய கட்சிகள் அனைத்தும் சுமார் ரூ.5,500 கோடி வரை செலவழித்திருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பெரிய கட்சிகள் அனைத்தும் சுமார் ரூ.5,500 கோடி வரை செலவழித்திருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை செலவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான வேட்பாளர்கள் அந்தத் தொகைக்கும் அதிகமாகவே பிரசாரத்தின்போது செலவழிக்கின்றனர். இது ரகசியமாக நடக்கிறது. அச்சு ஊடகத்தில் விளம்பரம், மிகப் பெரிய திரைகளைக் கொண்ட பிரசார வாகனங்கள் ஆகியவற்றுக்காக மட்டும் ரூ.600 கோடியிலிருந்து ரூ.900 கோடி வரை அரசியல் கட்சிகள் செலவழித்துள்ளன.
    மேலும், ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்காளர்களுக்கு சராசரியாக தலா ரூ.750 வீதம் அளித்துள்ளன.
    இந்த வகையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.
    உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடவடிக்கையின்போது, சுமார் 200 கோடியும், பஞ்சாபில் ரூ.100 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai