Enable Javscript for better performance
தாய்ப்பால் வங்கிகள் குறித்து விரைவில் தேசியக் கொள்கை- Dinamani

சுடச்சுட

    

    தாய்ப்பால் வங்கிகள் குறித்து விரைவில் தேசியக் கொள்கை

    By DIN  |   Published on : 18th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
    இதுதொடர்பாக மக்களவையில் கேள்வியொன்றுக்கு வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே கூறியுள்ளதாவது: நாட்டில் மத்திய அரசின் சார்பில் தாய்ப்பால் வங்கி எதுவும் செயல்படவில்லை. எனினும், தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கும் பிரசாரத்தின் முக்கிய அங்கமாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் என்றார் அமைச்சர்.
    முன்னதாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கும் பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
    ரூ.100க்கு கீழ் வரி பாக்கி தள்ளுபடி: இதனிடையே, ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள வருமான வரி பாக்கிகளை தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 21.54 லட்சம் பேரின் வரி பாக்கி தள்ளுபடியாகவிருக்கிறது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.
    இணையவழியில் ராணுவ நுழைவுத் தேர்வு: ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வை இணையவழியில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
    அண்மையில் நடைபெற்ற ராணுவ நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததைத் தொடர்ந்து மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai