சுடச்சுட

    

    நிலத்துக்கு இழப்பீடாக எக்ஸ்பிரஸ் ரயில்: விவசாயிக்கு இன்பதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

    By DIN  |   Published on : 18th March 2017 12:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    railways


    புது தில்லி: ரயில்வே துறையால் கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரிய விவசாயிக்கு, ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையே வழங்கி நீதிமன்றம் இன்பதிர்ச்சிக் கொடுத்துள்ளது.

    2015ம் ஆண்டு ரயில்வேயால் கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்துக்கு இழப்பீடு கேட்டு சம்பூரண் சிங் நீதிமன்றத்தின் மூலம் போராடி வருகிறார். புதிய ரயில் பாதை அமைக்க, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனது நிலத்தை கையகப்படுத்திய ரயில்வே, அதற்கு மிகக் குறைவான தொகையை அளித்திருப்பதாக அவர் வாதாடினார்.

    இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றாலும், உரிய இழப்பீட்டை கொடுக்க ரயில்வே மறுத்துவிட்டது. உடனடியாக அவர் மற்றொரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பூரண் சிங்குக்கு 1 கோடி மதிப்புள்ள விரைவு ரயிலை இழப்பீடாக வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    ரயில்வேயிடம் நிலுவைத் தொகையைப் பெற போராட முடியவில்லை. அதனால், ரயில்வே சொத்துக்களை ஜப்தி செய்து அதன் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர் என்றார் வழக்குரைஞர்.

    கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, லூதியானா ரயில்நிலையத்தின் அதிகாரியாக விவசாயியை நியமித்த நீதிபதி ஜஸ்பால் வெர்மா, அமிர்தசரஸ் - பஞ்சாப் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை இழப்பீடாக வழங்கி உத்தரவிட்டார்.

    நீதிமன்ற ஆணையை எடுத்துக் கொண்டு லூதியானா சென்ற விவசாயி, நீதிமன்ற ஆணைகளை ரயில்வே நிலைய அதிகாரியிடமும், அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநரிடம் காட்டினார்.

    மேலும், இந்த பிரச்னை, பயணிகளை பாதிக்கக் கூடாது என்பதால் ரயில் எங்கு செல்ல வேண்டுமோ அதுவரை ரயிலை இயக்கவும் விவசாயி பெருந்தன்மையோடு அனுமதி அளித்தார்.   அதற்குள், ரயில்வே அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவுக்கு தடையாணை பெற்று, அடுத்த விசாரணை வரை ரயிலின் உரிமையை ரயில்வேயிடம் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

    சனிக்கிழமை மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, விவசாயிக்கு ரயில்வே உரிய இழப்பீட்டை வழங்காவிட்டால் உடனடியாக ரயிலை ஏலம் விடவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளது என்று வழக்குரைஞர் ராகேஷ் காந்தி கூறியுள்ளார்.

    இதுபோல ஏராளமான நில இழப்பீடு வழக்குகளுக்கு, நீதிமன்றம் ரயில்களை இழப்பீடாக வழங்கிய சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai