சுடச்சுட

  

  ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ’பீம்' செயலியை (ஆப்) இதுவரை 1.8 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக ’நீதி ஆயோக்' என்று அழைக்கப்படும் மத்திய கொள்கைக் குழுவின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
  உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மத்திய அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்காக ’பீம்' என்ற செயலியை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார்.
  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலி, அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
  இந்நிலையில், ’நீதி ஆயோக்'கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  பீம் செயலி அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டது. கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 1.8 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ரொக்கமில்லா பரிவர்த்தனையை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai