சுடச்சுட

  

  பேச்சு நடத்த தீவிரவாத இயக்கங்களுக்கு அஸ்ஸாம் முதல்வர் அழைப்பு

  By DIN  |   Published on : 18th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sonowal

  அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்று அந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் அழைப்பு விடுத்துள்ளார்.
  அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
  தீவிரவாதிகள், சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவர், ஊழல் உள்ளிட்டவை இல்லாத அஸ்ஸாமை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கத்தினர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். மாநிலத்தின் அமைதிக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய முன்வரும் யார் வேண்டுமானாலும் அரசுடன் பேச்சு நடத்தலாம். மாநில மக்களும் அமைதியைத்தான் விரும்புகின்றனர்.
  மாநிலத்தில் தீவிரவாதம் தலைதூக்குவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தீவிரவாத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்.
  வங்கதேசத்துடனான எல்லையில் முழுமையாக முள்வேலி அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் உத்தரவின்படி அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன.
  உச்ச நீதிமன்றம் மற்றும் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தேசிய குடிமக்கள் பதிவை மறுசீரமைக்கும் பணி அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai