சுடச்சுட

  

  மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி தில்லியில் ஆர்ப்பாட்டம்: கனிமொழி

  By புதுதில்லி  |   Published on : 18th March 2017 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmk

  மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் தில்லியில் வரும் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் தில்லியில் வரும் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் பிரதமர் மோடி நினைத்தால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியும்.

  நாட்டை பெண்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும் எனக் கூறி வரும் அவர், மகளிர் மசோதாவை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும். தில்லியில் திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

  மேலும் முத்தலாக் விஷயத்தில் சிறுபான்மையினரின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai