Enable Javscript for better performance
மும்பையில் பாலியல் வன்கொடுமை: 5-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்- Dinamani

சுடச்சுட

    

    மும்பையில் பாலியல் வன்கொடுமை: 5-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

    By DIN  |   Published on : 18th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பையில் ஒரு கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது 5-ஆவது மாடியில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    மும்பையின் பைதோனி பகுதியிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கு கட்டடத்தின் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் ஓர் இளம்பெண் கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    விசாரணையில், அந்த பெண் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், வேலைவாங்கித் தருவதாக கூறி அவரை மும்பைக்கு ஒருவர் அழைத்து வந்ததும் தெரியவந்தது. தாணே மாவட்டத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அந்த நபர் பல நாள்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    தொடர்ந்து, மும்பையின் பைதோனி பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கு கட்டடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து வந்த அவர், அந்த கட்டட உரிமையாளருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, 5ஆவது மாடியில் இருந்து அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார். சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai