சுடச்சுட

    
    arunjetly

    புதிய ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
    வெள்ளிக்கிழமை கூடிய மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அருண் ஜேட்லி தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
    புதிய ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்ந்துள்ளன.
    இந்த ரொக்க மதிப்பை மீண்டும் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் புழக்கத்தில் இன்னும் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன என்பது தெரியவரும்.
    கடந்த மார்ச் 3-ஆம் தேதி நிலவரப்படி ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
    இதனிடையே, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் அளித்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றச் சென்றபோது உயிரிழப்புகள் நேரிட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
    இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த பதிலை அளித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai