Enable Javscript for better performance
விசைத்தறியாளர்கள் நலன் காக்க விரைவில் புதிய திட்டம்: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறியாளர்கள் நலன் காக்க விரைவில் புதிய திட்டம்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 18th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விசைத்தறியாளர்களின் நலன்களை காப்பதற்காக விரைவில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த பாஸ்கர் ராபோலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் அஜய் டம்டா கூறியதாவது:
    ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விசைத்தறியாளர்களின் நலன்களை காப்பதற்காக புதிய திட்டத்தை மிக விரைவில் தொடங்கவிருக்கிறோம். மின்விநியோகம் சீராக இல்லாதது, நூல் உள்ளிட்ட பொருள்கள் போதிய அளவில் கிடைக்காதது போன்ற பிரச்னைகளை, விசைத்தறியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் அமையும். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையை மேம்படுத்துவதற்காக சிறப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. விசைத்தறி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai