சுடச்சுட

    

    அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: தண்டனை விவரம் 22-இல் அறிவிப்பு?

    By DIN  |   Published on : 19th March 2017 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள தர்காவில் கடந்த 2007-இல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? என்பதை ஜெய்ப்பூர் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வரும் 22-ஆம் தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அஜ்மீரில் உள்ள பிரபலமான குவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டு வெடித்ததில் 3 யாத்ரிகர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். முதலில் இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் போலீஸார் பின்னர் அதை மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் (ஏடிஎஸ்) ஒப்படைத்தனர்.
    அதன் பின், இவ்வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள என்ஐஏ காவல் நிலையத்தில் இவ்வழக்கு கடந்த 2011, ஏப்ரல் 6-இல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ஹிந்து மதத் துறவி சுவாமி அசீமானந்த், பவேஷ் படேல், தேவேந்திர குப்தா, சுனில் ஜோஷி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
    இந்நிலையில், இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்தது. பவேஷ் படேல், தேவேந்திர குப்தா, சுனில் ஜோஷி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, சுவாமி அசீமானந்த் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தார். குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்டர்களில் ஒருவரான சுனில் ஜோஷி ஏற்கெனவே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
    இதனிடையே, குற்றவாளிகள் பவேஷ் படேலுக்கும், தேவேந்திர குப்தாவுக்கும் என்ன தண்டனை? என்பது தொடர்பான வாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தண்டனை விவரத்தை நீதிபதி ஒத்திவைத்து விட்டதாகவும், வரும் புதன்கிழமைக்கு (22ஆம் தேதி) இவ்விவகாரத்தை எடுத்துக் கொள்வதாக அறிவித்ததாகவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜகதீஷ் ராணா தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai