சுடச்சுட

    

    உத்தரகண்ட் மாநிலத்தின் பெளரி மாவட்டம் கடந்த இரு நாள்களில் இரு மாநில முதல்வர்களை நாட்டுக்கு அளித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத்தும், உத்தரகண்ட் புதிய முதல்வர் திரிவேந்திர சிங்கும் ராவத்தும் பெளரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
    யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் அரசியலில் இருந்தாலும் அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் பிறந்தவர்தான். அவரது சொந்த ஊர் பெளரி மாவட்டத்தின் பன்சூர் கிராமமாகும். உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ச்ங் ராவத் அதே மாவட்டத்தின் கயர்சாய்ன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது இருவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமையாகும். இரு முதல்வர்களும் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளனர்.
    யோகி ஆதித்யநாத், திரிவேந்திர சிங் ஆகியோர் பிறந்தபோது உத்தரகண்ட் மாநிலம் ஒன்றுபட்ட உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட 16 ஆண்டுகளில் 9 முதல்வர்களைச் சந்தித்து விட்டது. அவர்களில் 4 பேர், மலைப்பகுதியான 
    பெளரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராணுவத் தளபதி விபின் ராவத், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், உளவு அமைப்பான ரா-வின் தலைவர் அனில் தஸ்மானா ஆகியோரும் உத்தரகண்டின் பெளரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அந்த மாவட்டத்துக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai