சுடச்சுட

    

    உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி: முஸ்லிம்களை ஏமாற்றியவர்களுக்குப் பாடம்

    By DIN  |   Published on : 19th March 2017 11:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது, கடந்த 70 ஆண்டுகளாக முஸ்லிம்களை ஏமாற்றி வந்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பாடம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி கூறினார்.
    பிகார் மாநிலம், கிஷன்கஞ்ச் நகரில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: 
    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளைப் பிரித்து, பாஜகவின் வெற்றிக்கு நானும், எனது அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் உதவி செய்ததாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். 
    ஆனால், உத்தரகண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மஜ்லீஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாத போதும், மதச் சார்பற்ற கட்சிகள் தோல்வியைத் தழுவியது ஏன்? என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
    உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றார் 
    அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai