சுடச்சுட

  

  கிராமங்களின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: தலாய் லாமா

  By DIN  |   Published on : 19th March 2017 11:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dalaliyalama

  மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானை போபாலில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது ஆசி வழங்கிய திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா.

  கிராமங்களின் முன்னேற்றத்தில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறினார்.
  "நர்மதை நதிப் பாதுகாப்பு' விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்பதற்காக மத்தியப் பிரதேசம் வந்த அவர், தேவாஸ் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் 
  ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  இந்தியாவின் வளம், மிகப்பெரிய நகரங்களின் முன்னேற்றத்தைவிட கிராமங்களின் முன்னேற்றத்தையே சார்ந்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றம், ஊரகப் பகுதிகளில் இருந்தே தொடங்க வேண்டும்.
  இந்தியா, விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. கிராமப்புற இந்தியா, நாட்டின் முன்னேற்றத்துக்கான நாடாக மாற வேண்டும். எனவே, கிராமப்புற பகுதிகளில் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் காணும்.
  பெண்களுக்கு வாய்ப்பு: பெண்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள். பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்பளித்தால், இந்த உலகை ஒரு சிறந்த இடமாக அவர்கள் மாற்றுவார்கள்.
  உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, சுற்றுச்சூழலை உலகளாவிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். நமது அணுகுமுறையும் முழுமையானதாக இருக்க வேண்டும். நர்மதை நதியைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு முயற்சிகளை முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் மேற்கொண்டு வருகிறார். அவரது முயற்சிகள் வெற்றியடைவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நமது முன்னோர்கள் இந்த பூமியில்தான் வாழ்ந்தார்கள். நமது எதிர்கால சந்ததியினரும் இங்குதான் வாழ்வார்கள். எனவே, நாம் நீரைப் பாதுகாக்க வேண்டும்; மரங்களை வளர்க்க வேண்டும்.
  உலகம் முழுவதும் மக்கள் இனவாத பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான சமூகப் பிரச்னைகளுக்கு மூல காரணம் இனவாதம் ஆகும். இன அடிப்படையிலான பாகுபாடு, கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும் என்று தலாய் லாமா கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai