சுடச்சுட

  

  கொல்கத்தா மேயர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 19th March 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொல்கத்தா மாநகராட்சி மேயரான திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த சோவன் சட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற அந்த மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
  சோவன் சட்டர்ஜி உள்ளிட்ட திரிணமூல் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ காட்சி வெளியான விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
  இந்நிலையில், கொல்கத்தா மாநகராட்சியின் 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, லஞ்சப் புகாரில் சிக்கிய சோவன் சட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai