சுடச்சுட

    
    Naxals-killed

    சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சண்டையில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    தண்டேவாடா மாவட்டம், பர்காம் எனும் கிராமத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தக் கிராமத்தில் சனிக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது, அடர்ந்த வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    நாங்களும் உரிய பதிலடி கொடுத்தோம். அதில், 5 நக்ஸல் தீவிரவாதிகள் உயிரிழந்தனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மற்ற நக்ஸல் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
    5 நக்ஸல்கள் சரண்: ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் நக்ஸல் உள்பட 5 நக்ஸல் தீவிரவாதிகள் சனிக்கிழமை சரணடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai