சுடச்சுட

    

    சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி

    By DIN  |   Published on : 19th March 2017 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக, உன்ஹேல் காவல் நிலைய ஆய்வாளர் எம்.ஆர்.ஓம்டே ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவு, உஜ்ஜைன் மாவட்டம், மாலிகேடி கிராமம் வழியாகச் சிலர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேனின் டயர் திடீரென பழுதானதையடுத்து, அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கி சாலையோரம் நின்றனர்.
    அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர்.
    மேலும், 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    விபத்தைத் தொடர்ந்து காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடி வருகிறோம் என்றார் ஓம்டே.
    ரூ. 2 லட்சம் நிதியுதவி: இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai