சுடச்சுட

    

    சிக்கன நடவடிக்கை: பஞ்சாப் முதல்வர் வாகனத்திலிருந்து சிவப்பு விளக்கு அகற்றம்

    By DIN  |   Published on : 19th March 2017 11:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசு வாகனங்களைப் பயன்படுத்தப்போவதில்லை என்று பஞ்சாபின் புதிய அரசு முடிவெடுத்துள்ளதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டன.
    இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
    அரசு வாகனங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று முதல்வர் அமரீந்தர் தலைமையிலான அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, இதுதொடர்பான அறிவிக்கையை எதிர்பார்க்காமல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டன என்றார் அவர்.
    பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய சிரோன்மணி அகாலி தள - பாஜக கூட்டணி ஆட்சியில் ஆடம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் அரசு கஜானா காலியாகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ், தாங்கள் ஆட்சியமைத்தால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
    இந்த நிலையில், அந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, அமரீந்தர் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
    அதையடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு வாகனங்களைப் பயன்படுத்தப்போவதில்லை என்று முதல்வர் அமரீந்தர் சிங்கும், அமைச்சர்களும் முடிவெடுத்தனர்.
    மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai