சுடச்சுட

    

    ஜிஎஸ்டி துணை மசோதாக்கள்: மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்?

    By DIN  |   Published on : 19th March 2017 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை (மார்ச் 20) ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது.
    இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
    ஜிஎஸ்டி வரி முறையை வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஈட்டுறுதிச் சட்டம், மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யு-ஜிஎஸ்டி) ஆகிய நான்கு முக்கிய துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவே அமைச்சரவை கூடுகிறது.
    ஏற்கெனவே, இந்த நான்கு துணை மசோதாக்களுக்கும், மாநில ஜிஎஸ்டி (எஸ்-ஜிஎஸ்டி) துணை மசோதாவுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதாவைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.
    ஆனால் ஈட்டுறுதிச் சட்டம், சி-ஜிஎஸ்டி, ஐ-ஜிஎஸ்டி, யு-ஜிஎஸ்டி ஆகிய நான்கு துணை மசோதாக்களும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்தத் துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால்தான், ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்த முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai