சுடச்சுட

  
  punjab

  பஞ்சாப் மாநிலத்தின் 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
  முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம், சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  பஞ்சாப் சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், வரும் 24, 27 ஆகிய தேதிகளில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  பேரவையில் ஆளுநர், வரும் 28-ஆம் தேதி உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறுவதுடன், அவரது உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. இதுதவிர, 2016-17-ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கையும், 2017-18-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளன.
  மேலும், முதல்வரின் முதன்மைச் செயலர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரை நியமிப்பதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai