சுடச்சுட

    

    பிகார்: அமைச்சர்களைப் பதவிநீக்க எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 19th March 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bihar

    பிகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் தொடர்பாக பாட்னாவிலுள்ள சட்டப் பேரவை வளாகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக

    பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 அமைச்சர்களையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் சனிக்கிழமை வலியுறுத்தினர்.
    பிகாரில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிஎஸ்எஸ்சி) வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, அந்த ஆணையத்தின் செயலர் பரமேஷ்வர் ராம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி அழைப்புகளில் இருந்து, இந்த விவகாரத்தில் மாநில அமைச்சர்கள் கிருஷ்நந்தன் பிரசாத் வர்மா, அலோக் மேத்தா ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐக்கிய ஜனதா தளத்தை (ஜேடியு) சேரந்த கிருஷ்நந்தன் பிரசாத் வர்மா, நிதீஷ் குமாரின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த அலோக் மேத்தா, கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் உள்ளனர்.
    இவர்களைத் தவிர, ஆர்ஜேடி மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ஜேடியு எம்எல்ஏ ராம் பாலக் சிங், பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் சர்மா ஆகியோருக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், அமைச்சர்கள் இருவரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் சனிக்கிழமை வலியுறுத்தினர்.
    அதைத் தொடர்ந்து, முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
    மேலும், ""செவிலியர் தேர்வு தொடர்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவின் தனிச் செயலர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அமைச்சரின் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் தகவல்கள், பரிந்துரைகள் யாவும் அரசின் உத்தரவுகளாகவே எடுத்துக் கொள்ளப்படும்'' என்றும் அவர் கூறினார்.
    அப்போது பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரேம் குமார் கூறுகையில், ""இதற்கு முன்பு எங்களது குற்றச்சாட்டுகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை. தற்போது, அமைச்சர்களின் பெயர்கள் வெளியான பிறகும் அவர்களை பதவியில் இருந்து நீக்காதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.
    அதையடுத்து, மாநில அமைச்சர் கிருஷ்நந்தன் பிரசாத் வர்மா, செய்தியாளர்களிடம் கூறிய
    தாவது:
    அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரை செய்ததற்காக, பணம் தரப்பட்டதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வினாத்தாளை கசிய விடவேண்டும் அல்லது தகுதியில்லாதவர்களை தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று தேர்வாணைய அதிகாரிகளிடம் நான் கூறவில்லை என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai