சுடச்சுட

    

    அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி வாழ்த்து தெரிவித்தார்.
    இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் பிரதமர் மோடியை நிக்கோலஸ் சர்கோஸி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதில் மத்திய அரசு வெற்றியடைந்ததற்காகவும் பிரதமருக்கு சர்கோஸி வாழ்த்து தெரிவித்தார்.
    பதிலுக்கு, பிரான்ஸ் தொடர்பாக சர்கோஸி சமீபத்தில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டதற்காக, அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    இரு தலைவர்களும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai