சுடச்சுட

    

    பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
    ரயில் எண்: 06049-திருச்சிராப்பள்ளி-பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் நண்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையம் வந்தடையும்.
    மறுமார்க்கத்தில், ரயில் எண்: 06050-பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்)-திருச்சிராப்பள்ளி வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, முறையே திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6.15 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் சென்றடையும்.
    இந்த ரயில் பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பங்கார்பேட், குப்பம், சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை, திருச்சி கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
    ரயிலில் 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பொதுப் பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 2, 2-ஆம் வகுப்பு சரக்கு 2 பெட்டிகள் உள்ளிட்ட 11 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். மார்ச் 19-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai